Wednesday, September 12, 2012

தமிழில் ப்ராஜெக்ட் மேனஜ்மென்ட்: ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule)

தமிழில் ப்ராஜெக்ட் மேனஜ்மென்ட்: ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule): ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule) ஒரு ப்ராஜெக்ட் அட்டவணையில் வெவ்வேறு     டாஸ்குகளும் அதன் தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் இருக்கு...

ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule)

ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule)
ஒரு ப்ராஜெக்ட் அட்டவணையில் வெவ்வேறு   டாஸ்குகளும் அதன் தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் இருக்கும்.  டாஸ்க் ஒரு  அட்டவணையில் உள்ள கடைசி எலிமென்ட் ஆகும்.  ப்ராஜெக்ட் அட்டவணை ஒரு ப்ரொஜெக்டில் உள்ள அணைத்து டாஸ்குகளையும் அது எப்போது முடிக்கப்பட வேண்டும் என்பதையும் கூறுகிறது.  ஒரு குறைந்தபட்ச திட்ட அட்டவணை ஒவ்வொரு டாஸ்க்/செயல்பாடு ஒரு திட்டமிட்ட தொடக்க தேதி மற்றும் திட்டமிட்ட முடியும்/பூச்சு தேதி அடங்கும்.

எப்போதும் எந்த ஒரு ப்ராஜெக்ட் அட்டவணை செய்ய முயலும் பொது WBS தேவைப்படும். WBS என்றால் என்ன ? Work Breakdown Structure , அதாவது தமிழில் வேலை பிரிப்பு அமைப்பு.  :)  ஒவ்வொரு பணியை அல்லது டாஸ்கிர்க்கான  ஒரு முயற்சி மதிப்பீடு, மற்றும் ஒவ்வொரு ஆதாரம்(Resource) கிடைக்கும் ஒரு ஆதார பட்டியல். ஒரு நல்ல ப்ராஜெக்ட் அட்டவணை செயய  அந்த ப்ரொஜெக்டில்  வேலை செய்யும் மக்களை சேர்க்க வேண்டும், இது ஒரு நல்ல பலனை தரும். 

பல தொழில்கலில் எடுத்க்கட்டாக பொறியியல் மற்றும் கட்டுமான  துறையில் திட்ட அட்டவணை வளர்ச்சி மற்றும் பராமரிப்பு வேலையை ஒரு முழு நேர திட்டமிடும் நபரோ அல்லது அணி  பொறுப்பேற்பார்கள்.  

Tuesday, September 11, 2012

ப்ராஜெக்ட் மேனேஜர் சந்திக்கும் 10 தலையாய பிரச்சினைகள்

ப்ராஜெக்ட் மேனேஜர் சந்திக்கும் 10 தலையாய பிரச்சினைகள் :
  1. ப்ராஜெக்ட் நிர்வாக சம்பந்தப்பட்ட செயல்பாடுகள். (எ.கா. : டைம் சீட், அட்டன்டன்ஸ், மீட்டிங் நோட்ஸ் போன்றவை..)
  2. ரீசௌர்ஸ் பங்கீடுகள் - ஒரு ப்ரொஜெக்டில் இருக்கும்   ரீசௌர்ஸ் மற்றொரு ப்ரோஜெச்டிற்கு தேவைப்படும்  பொழுது  ஷேர் செய்ய வேண்டீருக்கும்.
  3. வெண்டோர் (Vendor) - தொடர்பான செயல்பாடுகள்: அக்ரீமென்ட், காண்ட்ராக்ட் , பேரம் பேசுதல் (Negotiation), பாளிசீஸ் போன்றவை.
  4. சார்ந்து இருத்தல் (Dependency) - ப்ரொஜெக்டின் டீம் மேம்பெர்சின் திறமை சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. 
  5. எதிர்மறை பேச்சுக்கள் மற்றும் எண்ணங்கள் 
  6. சரியானதொரு எதிர்பார்ப்பை வைக்க இயலாமை (unable to set the right expectations)
  7. விர்ட்ஷுல் மற்றும் தொலைதூர தொடர்பு. கலாச்சார வேற்றுமை. 
  8. வரவு/செலவு திட்டத்தின் நெருக்கடி. 
  9. திட்ட மேலாண்மைக்கான கருவிகளை பயன்படுத்துவதில் ஏற்ப்படும் தாமதம் மற்றும் சிக்கல்கள்
  10. டொமைன் மற்றும் துறை சார்ந்து ஏற்படும் வார்ப்பு. (Typecast/Stereotyping)

Monday, September 10, 2012

ப்ராஜெக்ட் 5 முக்கிய குறிகோள்கள்

ப்ராஜெக்ட் 5 முக்கிய  குறிகோள்கள்:
ப்ராஜெக்ட் குறிகோள்கள் மிகவும் சக்தி வாயிந்தது.  இதனை நாம் அவசியம் தெளிவாக வரையறுக்க வேண்டும். ப்ரொஜெக்டின் குறிக்கோள்கள் பின்வரும் கோட்பாடுகளை  கொண்டிருக்குமேயானால் அது சாலச் சிறந்தது:

  • குறிப்பிட்ட நோக்கம் (Goals)
  • தெளிவான வரையறை (Scope )
  • நேரம், தரம்  (Time and Quality)

அது மட்டுமின்றி எந்த ஒரு ப்ரோஜெக்டும் பின்வரும் ஐந்து குறிகோள்களை கொண்டிருத்தல் நலம்:
1. ப்ரொஜெக்டை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து விட வேண்டும்.
2. ப்ரொஜெக்டை கொடுக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்திற்குள் முடிக்க வேண்டும் 
3. ப்ரொஜெக்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
4. ப்ரொஜெக்டின் தேவைகேற்ப தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும் மேலும் அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5. உங்களிடம் இந்த ப்ரோஜெக்ட்க்காக என்ன தரப்படுள்ளதோ அதனை வைத்துக்கொண்டு உங்களால் முடிந்த வரை செயல்படுங்கள் 

அஜைல் ப்ராஜெக்ட் பிளான்


  • அஜைல் ப்ராஜெக்ட் பிளான் ப்ரொஜெக்டின் சிறப்புக்களை சார்ந்து இருக்கும் .
  • அதில் சிறப்புகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்க்கான குறிப்புகள் இருக்காது. 
  • அஜைல் ப்ராஜெக்ட் பிளான்கலை பொறுத்தமட்டில் ஆறு மாதம் கழித்து என்ன நிலைமையில் இருக்கும் என்பது தெரியாத நிலையில், பிளான் செய்யபடுகிறது. 
  • வழக்கமாக செய்யப்படும் ப்ராஜெக்ட் பிளான் டாஸ்க் சார்ந்தவையாக இருக்கும்,  ஆனால்  அஜைல் ப்ராஜெக்ட் பிளான் ஸ்ப்ரின்ட் அல்லது சைக்கிள் ஆக பிரிந்து இருக்கும். இது அந்த ப்ராஜெக்ட் சார்ந்தவர்களுக்கு நேரடியான நிலையை அறிய உதவுகிறது. 
  • அஜைல் ப்ராஜெக்ட் பிளான் பொதுவாக ஒருவரால் செய்யப்படுவதில்லை மாறாக இது ஒரு டீம் வொர்க் போல செய்யபடுகிறது. இதன் மூலம் டீம் ப்ரொஜெக்டின் தன்மையை நன்கு அறிய முடிகிறது. 

Sunday, December 11, 2011

ப்ரொஜெக்ட் மேனேஜ்மேன்ட் சர்டிஃபிகேஷன் தேர்வு சில குறிப்புகள்

1.    எப்பொழுதும் உங்களுடன்  மேலும் ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து தயார் செய்வது நல்லது.

2.    முக்கியமாக PMBOK புத்தகத்தை நன்றாக படிக்க வேண்டும்.

3.    உங்களின் வேலையில் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் PMP தேர்வானது நீங்கள் ஒரு தலைசிறந்த ப்ரொஜெக்ட் மேனேஜர் என்று கருதுகிறது.
4.    PMP தேர்விற்க்கு நீங்கள் தயாராவதற்க்கு நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் தெரிவிப்பது உங்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவும்.
5.    குறைந்தது 2 மணி நேரமாவது தினமும் படிப்பது நல்லது.
6.    உங்கள் சந்தேகங்களை அவ்வப்பொது குழுக்களில் சேர்ந்து தீர்த்து கொள்வது நல்லது.

Thursday, December 1, 2011

திட்ட செயலாக்க குழுக்கள் மற்றும் அறிவு பகுதிகளில்

Knowledge Areas & Process Groups


படத்தை பற்றிய சில குறிப்புகள்:
  • எண்கள் பணிகளின் எண்ணிக்கை குறிக்கின்றன.
  • திட்டமிடல் , கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டு  குழுக்கள்  மிக அதிக  செயல்முறைகளை  கொண்டுள்ளது.  
Download