Wednesday, November 9, 2011

திட்ட மேலாண்மை நிபுணத்துவ சான்றிதழ்

திட்ட மேலாண்மை நிபுணத்துவ சான்றிதழ் பயன்கள் (PMP Certification Benefits):
  • இந்த அங்கீகாரம்  PMI சம்பளம் கணக்கெடுப்பில் - ஆறாவது பதிப்பு, ஒரு PMP உங்கள் அல்லாத credentialed நண்பர்கள் விட 10% அதிக உங்கள் சம்பளம் வரை அதிகரிக்கிறது.
  •  நீங்கள் சான்றிதழ் பெரும் முயற்சியில் செயல்முறையில் உங்கள் சொந்த பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.  
  • நேர்காணல் போது, போட்டி பெரும்பாலும் கடினமாக உள்ளது. நீங்கள் சான்றிதழ் பெற்ற நபர் எனில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை பெறுகிறீர்கள்
  • நீங்கள் உங்கள் PMP சான்றிதழ்  மூலம் நிறைய நெட்வொர்க்கிங்  வாய்ப்புகளை பெற முடியும். 
  • நீங்கள்  தேவைப்படும் போது மீது  சரியான கருவிகள் மற்றும் ஆய்வு  செய்து உங்கள் ப்ரொஜெக்டை செம்மைப்படுத்த உதவும்.
  • ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.  நீங்கள் சிறந்த அறிவுரையாளராக திறம் பெற உங்கள் அனுபவம் பெரிதும் உதவும். ஆகையால்  சிறந்த வழிகாட்டியாகவும்  முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வெளிக்கொணரவும் உங்களால் இயலும்
  • உங்களுக்கு பல புதிய வேலைவாய்ப்புகளை தங்களின் PMP சான்றிதழ்கள் பெற உதவும்.
  • உங்களை சுற்றி மரியாதையும் மதிப்பும் இருக்கும்.  சில நேரங்களில் பலருக்கு கொஞ்சம் பொறாமையாகவும்  இருக்கும்!

Sunday, November 6, 2011

திட்ட மேலாளருக்கு தேவையான திறன்கள்

திட்ட மேலாளரின் பங்கு(Role of Project Manager):


நாம் திட்ட மேலாண்மை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் போது, முக்கியமாக திட்ட மேலாளரின் பங்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். திட்ட மேலாளரின் பாத்திரம் ஒரு திரைப்பட இயக்குனரின் வேலையை போல் உள்ளது. 

திட்ட மேலாளர் என்பவர் யார்?
“திட்ட மேலாளர் திட்ட இலக்குகளை அடையச் செய்ய நிறுவனத்தின் ஒதுக்கப்படும் ஒரு நபர் ஆவார்.”

திட்ட மேலாளரின் செயல்பாடுகள்(Project Manager) செயல்பாடுகள் மேலாளரின்(Operation Manager) செயல்பாடுகளிருந்து வேறுபட்டு உள்ளது

திட்ட மேலாளருக்கு தேவையான திறன்கள்:
  • திட்ட மேலாளர் ஒரு பொதுவான குறிக்கோளை அடைவதற்கு சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர்களை ஒருங்கிணைக்கிறார்.
  • எந்த திட்ட மேலாளரும் முக்கிய நிறுவன மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை அடையாளம் காணவும் மற்றும் தீர்க்கவும் திறனும் ஆர்வமும் இருக்க வேண்டும்.
  • ப்ரொஜெக்டின் ஒவ்வொரு உறுப்பினரையும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
  • நெருக்கமாக குழு அல்லது திட்ட உறுப்பினர்கள் பாத்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • திட்ட உறுப்பினர்களின் திறன்கள் மற்றும் பலவீனம் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
  • திட்டத்தின் அனைத்து மைல்கற்களையும் கண்காணிக்கவும்
  • அனைத்து திட்ட விவரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும்
  • திட்டத்தின் துவக்கவும் மற்றும் நிறுத்தவும் தெரிய வேண்டும்

Saturday, November 5, 2011

செயல்பாட்டு குலு: தொடக்கநிலை (Initiation)


செயல்பாட்டு குலு: தொடக்கநிலை (Initiation)

நாம் எற்க்கெனவே உள்ள பதிவின் தொடர்ச்சியாக நாம் இப்பொது தொடக்கநிலை/தொடங்குதல் செயல்பாட்டு குழுவினை பற்றி பார்ப்போம்.

தொடங்குதல் குழுமத்தில் ஒரு புதிய ப்ரொஜ்ட் தொடங்கும் பொழுது அல்லது ஒரு புதிய படினிலை (Phase) தொடங்குவதற்க்கான அனைத்து முறைகளும்/ப்ராசஸ் (Process) அடங்கும்.

  1. இதன் மூலம் ப்ரொஜெக்டிற்க்கு தேவையான தொடக்க நிலை நோக்கம்(Initial Scope) வரையருக்கப்படுகிறது மேலும் தொடக்க நிலை நிதிவளங்களும்(Initial financial resources) வரையருக்கப்படுகின்றன.
  2. ப்ரொஜெக்டின் பங்குதாரர்கள் கண்டறியவும் இதன் செயல் முறைகள் பயன்படுகின்றன.
  3. ப்ரொஜெக்ட் மேனேஜெர் இந்த தொடங்குதல் (Initiation) செயல்குழுவில் தான் தேர்ந்தெடுக்கப்ப்டுகிறார்.
  4. இந்த தகவல்களே பின்னர் பங்குதாரர்கள் பதிவிலும் (stakeholder register) மேலும் ப்ரொஜெக்ட் அதிகாரப்பத்திரத்திலும் (Project Charter)
  5. ப்ரொஜெக்ட் அதிகாரப்பத்திரம் ஒப்புக்கொண்டவுடன் (Approval)  ப்ரொஜெக்ட் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுகின்றது.

ப்ரொஜெக்டின் இயல்புகள்


ப்ரொஜெக்டின் இயல்புகள்:

ப்ரொஜெக்ட் என்பது தொழின் தன்மையினை மாற்ற வல்லது. ப்ரொஜெக்டின் இயல்புகளை கீழே உள்ள படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்:



ப்ரொஜெக்ட் எடுத்துகாட்டுக்கள்:
  1. ஒரு இர்பி (ERP) இம்பலிமென்டெஷ்ன்
  2. ஒரு வீடு கட்டுதல்
  3. ஒரு இவென்ட் நடத்துதல்
  4. ஒரு ரெக்ருட்மென்ட் ட்ரைவ் செயதல்

ப்ராஜெக்ட் உருவாகும் காரணங்கள்

ப்ராஜெக்ட் உருவாகும் காரணங்கள் :

மார்க்கெட் டிமான்ட் :
மார்க்கெட் டிமாண்டின் காரணமாக நாம் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டி இருக்கலாம்.  எடுத்துக்காட்டாக குறைந்து வரும் நீர் மற்றும் நிலக்கரி வளங்களால் காற்றலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் ப்ராஜெக்ட் ஒரு நிறுவனம் செய்ய நேரலாம்.

பிசினஸ் தேவை:
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் தனது கிளைகளை விரிவுபடுத்த பத்து நகரங்களை தேர்ந்து எடுத்திருக்கலம். அதற்காக ஒரு ப்ராஜெக்ட் செய்ய நேரும்.

வாடிக்கையாளரின் தேவை:
ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளரின் தேவை ப்ரோஜெகடிர்க்கான  தேவைகள்  உருவாக்கலாம்.  எடுத்துக்காட்டாக செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எப்ம் சேவை கொடுப்பதற்கான ஆராயச்சி ஒரு ப்ராஜெக்ட் ஆக அமையலாம்.

சட்ட பூர்வமான தேவை:
எடுத்துக்காட்டாக அணைத்து தகவல் பலகைகளும் தமிழில் அறிக்கை இடம் பெற வேண்டும் என ஒரு அரசனை வெளியிட்டால் ஏற்க்கனவே இருக்கும் தகவல் பலகைகளில் தமிழில் அறிக்கைகளை வெளியிட அணைத்து வசித்களையும் செய்து தருவது ஒரு ப்ராஜெக்ட்.

Thursday, October 27, 2011

ஆர்கனைசேஷன் அமைப்பு வகைகள்: I

ஆர்கனைசேஷன் அமைப்பு வகைகள்:

ஒரு நிறுவனத்தில்  பல்வேறு வகையான மக்கள் பனியாற்றுகின்றணர். அவர்களை அனைவரும் குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர். இவர்களின் அமைப்புத் தன்மை பொறுத்து நிறுவனத்தின் செயல் திறன் அமைகிறது.

துரைசார்ந்த அமைப்பு - ஃபங்சனல் ஆர்கனைசேஷன் (Functional Organization):
1. இவை துறை சார்ந்து பிரிக்கப்படுகின்றன. (எ.கா. அக்கௌண்டிங்க், மார்க்கெட்டிங்,உற்பத்தி)
2. இவ்வகை ஆர்கனைசேஷனில் ப்ரொஜெக்ட்டுகள் துறை சார்ந்து  மட்டுமே இருக்கும்.

நன்மைகள்:
1. ஸ்பெஷ்லிஸ்ட்டுகளின் மேலான்மை எளிதாகும்.
2. குழுவின் செயல் உறுப்பினர்கள் ஒருவருக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
3. அவர்களின் துறையில் வளர்ச்சி அடைவார்கள்.

தீமைகள்:
1. ப்ரொஜ்க்டின் முக்கியத்துவத்தை விட துறை சார்ந்த தேவைகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
2. ப்ரொஜ்க்ட் மேனெஜருக்கு மிகவும் குறைந்த அல்லது அதிகாரம் இருப்பதில்லை.
3. ப்ரொஜ்க்ட் மேனெஜ்மெண்ட் சார்ந்த அனுபவம் முழுதாக கிடைப்பதில்லை.

Thursday, April 14, 2011

ப்ராஜெக்ட் சார்ட்டர்

ப்ராஜெக்ட் சார்ட்டர் (Project Charter )

ஒரு ப்ரோஜெக்க்டிற்கு தேவையான குறிக்கோள்களையும், நோக்கங்களையும் வரையறுப்பதே ப்ராஜெக்ட் சார்டேரின் பயன். மேலும் இந்த டாகுமென்ட் ப்ரொஜெக்டின் முக்கிய ஆவணம் ஆகும்.

ப்ராஜெக்ட் சார்டேரின் பின்வரும் முக்கிய தகவல்களை நமக்கு தெரிவிகின்றது:
1  எதற்காக இந்த ப்ராஜெக்ட் ?
2  இந்த ப்ரொஜெக்டின் குறிக்கோள் மற்றும் தடைகள் (Constraints )  என்ன?
3 எவ்வாறு இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்தப்படும்
4  ப்ரொஜெக்டின் பங்குதரார்கள் யார்  என்பதையும் தெரிவிக்கின்றது.

ப்ராஜெக்ட் சார்டரை தயாரிப்பதில் முக்கியமானவை:
1. முதலில் அதற்க்கு தேவையான் உள்ளிடுகளை தயார் செய்ய வேண்டும்
2 . முக்கியமாக ப்ரொஜெக்டின் பின்புலம், தொடர்புடையவர்கள் மற்றும் இதர செய்திகளை சேகரித்து கொள்ள வேண்டும்.
3 . பின்பு  ஒரு தொடக்க வரைவினை தயார் செய்ய வேண்டும்
4 . முடிந்த வரியில் நிதி மற்றும் கால அட்டவணை சேர்ப்பது மிக நல்லதாகும்