திட்ட மேலாண்மை; ப்ராஜெக்ட் மேனஜ்மென்ட் பற்றிய வலைத்தளம் இது. மேலும் PMP எனப்படும் தேர்வினை அடிப்படையாக கொண்டது. உங்கள் கருத்து வரவேற்க்கப்படுகிறது.
Wednesday, September 12, 2012
தமிழில் ப்ராஜெக்ட் மேனஜ்மென்ட்: ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule)
தமிழில் ப்ராஜெக்ட் மேனஜ்மென்ட்: ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule): ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule) ஒரு ப்ராஜெக்ட் அட்டவணையில் வெவ்வேறு டாஸ்குகளும் அதன் தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் இருக்கு...
ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule)
ப்ராஜெக்ட் அட்டவணை (Project Schedule)
ஒரு ப்ராஜெக்ட் அட்டவணையில் வெவ்வேறு டாஸ்குகளும் அதன் தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் இருக்கும். டாஸ்க் ஒரு அட்டவணையில் உள்ள கடைசி எலிமென்ட் ஆகும். ப்ராஜெக்ட் அட்டவணை ஒரு ப்ரொஜெக்டில் உள்ள அணைத்து டாஸ்குகளையும் அது எப்போது முடிக்கப்பட வேண்டும் என்பதையும் கூறுகிறது. ஒரு குறைந்தபட்ச திட்ட அட்டவணை ஒவ்வொரு டாஸ்க்/செயல்பாடு ஒரு திட்டமிட்ட தொடக்க தேதி மற்றும் திட்டமிட்ட முடியும்/பூச்சு தேதி அடங்கும்.
எப்போதும் எந்த ஒரு ப்ராஜெக்ட் அட்டவணை செய்ய முயலும் பொது WBS தேவைப்படும். WBS என்றால் என்ன ? Work Breakdown Structure , அதாவது தமிழில் வேலை பிரிப்பு அமைப்பு. :) ஒவ்வொரு பணியை அல்லது டாஸ்கிர்க்கான ஒரு முயற்சி மதிப்பீடு, மற்றும் ஒவ்வொரு ஆதாரம்(Resource) கிடைக்கும் ஒரு ஆதார பட்டியல். ஒரு நல்ல ப்ராஜெக்ட் அட்டவணை செயய அந்த ப்ரொஜெக்டில் வேலை செய்யும் மக்களை சேர்க்க வேண்டும், இது ஒரு நல்ல பலனை தரும்.
பல தொழில்கலில் எடுத்க்கட்டாக பொறியியல் மற்றும் கட்டுமான துறையில் திட்ட அட்டவணை வளர்ச்சி மற்றும் பராமரிப்பு வேலையை, ஒரு முழு நேர திட்டமிடும் நபரோ அல்லது அணி பொறுப்பேற்பார்கள்.
Tuesday, September 11, 2012
ப்ராஜெக்ட் மேனேஜர் சந்திக்கும் 10 தலையாய பிரச்சினைகள்
ப்ராஜெக்ட் மேனேஜர் சந்திக்கும் 10 தலையாய பிரச்சினைகள் :
- ப்ராஜெக்ட் நிர்வாக சம்பந்தப்பட்ட செயல்பாடுகள். (எ.கா. : டைம் சீட், அட்டன்டன்ஸ், மீட்டிங் நோட்ஸ் போன்றவை..)
- ரீசௌர்ஸ் பங்கீடுகள் - ஒரு ப்ரொஜெக்டில் இருக்கும் ரீசௌர்ஸ் மற்றொரு ப்ரோஜெச்டிற்கு தேவைப்படும் பொழுது ஷேர் செய்ய வேண்டீருக்கும்.
- வெண்டோர் (Vendor) - தொடர்பான செயல்பாடுகள்: அக்ரீமென்ட், காண்ட்ராக்ட் , பேரம் பேசுதல் (Negotiation), பாளிசீஸ் போன்றவை.
- சார்ந்து இருத்தல் (Dependency) - ப்ரொஜெக்டின் டீம் மேம்பெர்சின் திறமை சார்ந்து இருக்கவேண்டியுள்ளது.
- எதிர்மறை பேச்சுக்கள் மற்றும் எண்ணங்கள்
- சரியானதொரு எதிர்பார்ப்பை வைக்க இயலாமை (unable to set the right expectations)
- விர்ட்ஷுல் மற்றும் தொலைதூர தொடர்பு. கலாச்சார வேற்றுமை.
- வரவு/செலவு திட்டத்தின் நெருக்கடி.
- திட்ட மேலாண்மைக்கான கருவிகளை பயன்படுத்துவதில் ஏற்ப்படும் தாமதம் மற்றும் சிக்கல்கள்
- டொமைன் மற்றும் துறை சார்ந்து ஏற்படும் வார்ப்பு. (Typecast/Stereotyping)
Monday, September 10, 2012
ப்ராஜெக்ட் 5 முக்கிய குறிகோள்கள்
ப்ராஜெக்ட் 5 முக்கிய குறிகோள்கள்:
ப்ராஜெக்ட் குறிகோள்கள் மிகவும் சக்தி வாயிந்தது. இதனை நாம் அவசியம் தெளிவாக வரையறுக்க வேண்டும். ப்ரொஜெக்டின் குறிக்கோள்கள் பின்வரும் கோட்பாடுகளை கொண்டிருக்குமேயானால் அது சாலச் சிறந்தது:
ப்ராஜெக்ட் குறிகோள்கள் மிகவும் சக்தி வாயிந்தது. இதனை நாம் அவசியம் தெளிவாக வரையறுக்க வேண்டும். ப்ரொஜெக்டின் குறிக்கோள்கள் பின்வரும் கோட்பாடுகளை கொண்டிருக்குமேயானால் அது சாலச் சிறந்தது:
அது மட்டுமின்றி எந்த ஒரு ப்ரோஜெக்டும் பின்வரும் ஐந்து குறிகோள்களை கொண்டிருத்தல் நலம்:
1. ப்ரொஜெக்டை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து விட வேண்டும்.
1. ப்ரொஜெக்டை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து விட வேண்டும்.
2. ப்ரொஜெக்டை கொடுக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்திற்குள் முடிக்க வேண்டும்
3. ப்ரொஜெக்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. ப்ரொஜெக்டின் தேவைகேற்ப தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும் மேலும் அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5. உங்களிடம் இந்த ப்ரோஜெக்ட்க்காக என்ன தரப்படுள்ளதோ அதனை வைத்துக்கொண்டு உங்களால் முடிந்த வரை செயல்படுங்கள்
3. ப்ரொஜெக்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. ப்ரொஜெக்டின் தேவைகேற்ப தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும் மேலும் அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5. உங்களிடம் இந்த ப்ரோஜெக்ட்க்காக என்ன தரப்படுள்ளதோ அதனை வைத்துக்கொண்டு உங்களால் முடிந்த வரை செயல்படுங்கள்
அஜைல் ப்ராஜெக்ட் பிளான்
- அஜைல் ப்ராஜெக்ட் பிளான் ப்ரொஜெக்டின் சிறப்புக்களை சார்ந்து இருக்கும் .
- அதில் சிறப்புகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்க்கான குறிப்புகள் இருக்காது.
- அஜைல் ப்ராஜெக்ட் பிளான்கலை பொறுத்தமட்டில் ஆறு மாதம் கழித்து என்ன நிலைமையில் இருக்கும் என்பது தெரியாத நிலையில், பிளான் செய்யபடுகிறது.
- வழக்கமாக செய்யப்படும் ப்ராஜெக்ட் பிளான் டாஸ்க் சார்ந்தவையாக இருக்கும், ஆனால் அஜைல் ப்ராஜெக்ட் பிளான் ஸ்ப்ரின்ட் அல்லது சைக்கிள் ஆக பிரிந்து இருக்கும். இது அந்த ப்ராஜெக்ட் சார்ந்தவர்களுக்கு நேரடியான நிலையை அறிய உதவுகிறது.
- அஜைல் ப்ராஜெக்ட் பிளான் பொதுவாக ஒருவரால் செய்யப்படுவதில்லை மாறாக இது ஒரு டீம் வொர்க் போல செய்யபடுகிறது. இதன் மூலம் டீம் ப்ரொஜெக்டின் தன்மையை நன்கு அறிய முடிகிறது.
Sunday, December 11, 2011
ப்ரொஜெக்ட் மேனேஜ்மேன்ட் சர்டிஃபிகேஷன் தேர்வு சில குறிப்புகள்
1. எப்பொழுதும் உங்களுடன் மேலும் ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து தயார் செய்வது நல்லது.
2. முக்கியமாக PMBOK புத்தகத்தை நன்றாக படிக்க வேண்டும்.
3. உங்களின் வேலையில் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் PMP தேர்வானது நீங்கள் ஒரு தலைசிறந்த ப்ரொஜெக்ட் மேனேஜர் என்று கருதுகிறது.
4. PMP தேர்விற்க்கு நீங்கள் தயாராவதற்க்கு நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் தெரிவிப்பது உங்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவும்.
5. குறைந்தது 2 மணி நேரமாவது தினமும் படிப்பது நல்லது.
6. உங்கள் சந்தேகங்களை அவ்வப்பொது குழுக்களில் சேர்ந்து தீர்த்து கொள்வது நல்லது.
Thursday, December 1, 2011
திட்ட செயலாக்க குழுக்கள் மற்றும் அறிவு பகுதிகளில்
![]() |
| Knowledge Areas & Process Groups |
படத்தை பற்றிய சில குறிப்புகள்:
- எண்கள் பணிகளின் எண்ணிக்கை குறிக்கின்றன.
- திட்டமிடல் , கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டு குழுக்கள் மிக அதிக செயல்முறைகளை கொண்டுள்ளது.
Wednesday, November 9, 2011
திட்ட மேலாண்மை நிபுணத்துவ சான்றிதழ்
திட்ட மேலாண்மை நிபுணத்துவ சான்றிதழ் பயன்கள் (PMP Certification Benefits):
- இந்த அங்கீகாரம் PMI சம்பளம் கணக்கெடுப்பில் - ஆறாவது பதிப்பு, ஒரு PMP உங்கள் அல்லாத credentialed நண்பர்கள் விட 10% அதிக உங்கள் சம்பளம் வரை அதிகரிக்கிறது.
- நீங்கள் சான்றிதழ் பெரும் முயற்சியில் செயல்முறையில் உங்கள் சொந்த பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
- நேர்காணல் போது, போட்டி பெரும்பாலும் கடினமாக உள்ளது. நீங்கள் சான்றிதழ் பெற்ற நபர் எனில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை பெறுகிறீர்கள்
- நீங்கள் உங்கள் PMP சான்றிதழ் மூலம் நிறைய நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை பெற முடியும்.
- நீங்கள் தேவைப்படும் போது மீது சரியான கருவிகள் மற்றும் ஆய்வு செய்து உங்கள் ப்ரொஜெக்டை செம்மைப்படுத்த உதவும்.
- ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும். நீங்கள் சிறந்த அறிவுரையாளராக திறம் பெற உங்கள் அனுபவம் பெரிதும் உதவும். ஆகையால் சிறந்த வழிகாட்டியாகவும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வெளிக்கொணரவும் உங்களால் இயலும்
- உங்களுக்கு பல புதிய வேலைவாய்ப்புகளை தங்களின் PMP சான்றிதழ்கள் பெற உதவும்.
- உங்களை சுற்றி மரியாதையும் மதிப்பும் இருக்கும். சில நேரங்களில் பலருக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும்!
Sunday, November 6, 2011
திட்ட மேலாளருக்கு தேவையான திறன்கள்
திட்ட மேலாளரின் பங்கு(Role of Project Manager):
நாம் திட்ட மேலாண்மை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் போது, முக்கியமாக திட்ட மேலாளரின் பங்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். திட்ட மேலாளரின் பாத்திரம் ஒரு திரைப்பட இயக்குனரின் வேலையை போல் உள்ளது.
திட்ட மேலாளர் என்பவர் யார்?
திட்ட மேலாளருக்கு தேவையான திறன்கள்:
நாம் திட்ட மேலாண்மை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் போது, முக்கியமாக திட்ட மேலாளரின் பங்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். திட்ட மேலாளரின் பாத்திரம் ஒரு திரைப்பட இயக்குனரின் வேலையை போல் உள்ளது. திட்ட மேலாளர் என்பவர் யார்?
“திட்ட மேலாளர் திட்ட இலக்குகளை அடையச் செய்ய நிறுவனத்தின் ஒதுக்கப்படும் ஒரு நபர் ஆவார்.”
திட்ட மேலாளரின் செயல்பாடுகள்(Project Manager) செயல்பாடுகள் மேலாளரின்(Operation Manager) செயல்பாடுகளிருந்து வேறுபட்டு உள்ளது
திட்ட மேலாளருக்கு தேவையான திறன்கள்:
- திட்ட மேலாளர் ஒரு பொதுவான குறிக்கோளை அடைவதற்கு சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர்களை ஒருங்கிணைக்கிறார்.
- எந்த திட்ட மேலாளரும் முக்கிய நிறுவன மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை அடையாளம் காணவும் மற்றும் தீர்க்கவும் திறனும் ஆர்வமும் இருக்க வேண்டும்.
- ப்ரொஜெக்டின் ஒவ்வொரு உறுப்பினரையும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
- நெருக்கமாக குழு அல்லது திட்ட உறுப்பினர்கள் பாத்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
- திட்ட உறுப்பினர்களின் திறன்கள் மற்றும் பலவீனம் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
- திட்டத்தின் அனைத்து மைல்கற்களையும் கண்காணிக்கவும்
- அனைத்து திட்ட விவரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும்
- திட்டத்தின் துவக்கவும் மற்றும் நிறுத்தவும் தெரிய வேண்டும்
Saturday, November 5, 2011
செயல்பாட்டு குலு: தொடக்கநிலை (Initiation)
செயல்பாட்டு
குலு: தொடக்கநிலை (Initiation)
நாம்
எற்க்கெனவே உள்ள பதிவின்
தொடர்ச்சியாக நாம் இப்பொது தொடக்கநிலை/தொடங்குதல் செயல்பாட்டு குழுவினை பற்றி பார்ப்போம்.
தொடங்குதல்
குழுமத்தில் ஒரு புதிய ப்ரொஜ்ட் தொடங்கும் பொழுது அல்லது ஒரு புதிய படினிலை
(Phase) தொடங்குவதற்க்கான அனைத்து முறைகளும்/ப்ராசஸ் (Process) அடங்கும்.
- இதன் மூலம் ப்ரொஜெக்டிற்க்கு தேவையான தொடக்க நிலை நோக்கம்(Initial Scope) வரையருக்கப்படுகிறது மேலும் தொடக்க நிலை நிதிவளங்களும்(Initial financial resources) வரையருக்கப்படுகின்றன.
- ப்ரொஜெக்டின் பங்குதாரர்கள் கண்டறியவும் இதன் செயல் முறைகள் பயன்படுகின்றன.
- ப்ரொஜெக்ட் மேனேஜெர் இந்த தொடங்குதல் (Initiation) செயல்குழுவில் தான் தேர்ந்தெடுக்கப்ப்டுகிறார்.
- இந்த தகவல்களே பின்னர் பங்குதாரர்கள் பதிவிலும் (stakeholder register) மேலும் ப்ரொஜெக்ட் அதிகாரப்பத்திரத்திலும் (Project Charter)
- ப்ரொஜெக்ட் அதிகாரப்பத்திரம் ஒப்புக்கொண்டவுடன் (Approval) ப்ரொஜெக்ட் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுகின்றது.
ப்ராஜெக்ட் உருவாகும் காரணங்கள்
ப்ராஜெக்ட் உருவாகும் காரணங்கள் :
மார்க்கெட் டிமான்ட் :
மார்க்கெட் டிமாண்டின் காரணமாக நாம் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டி இருக்கலாம். எடுத்துக்காட்டாக குறைந்து வரும் நீர் மற்றும் நிலக்கரி வளங்களால் காற்றலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் ப்ராஜெக்ட் ஒரு நிறுவனம் செய்ய நேரலாம்.
பிசினஸ் தேவை:
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் தனது கிளைகளை விரிவுபடுத்த பத்து நகரங்களை தேர்ந்து எடுத்திருக்கலம். அதற்காக ஒரு ப்ராஜெக்ட் செய்ய நேரும்.
வாடிக்கையாளரின் தேவை:
ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளரின் தேவை ப்ரோஜெகடிர்க்கான தேவைகள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எப்ம் சேவை கொடுப்பதற்கான ஆராயச்சி ஒரு ப்ராஜெக்ட் ஆக அமையலாம்.
சட்ட பூர்வமான தேவை:
எடுத்துக்காட்டாக அணைத்து தகவல் பலகைகளும் தமிழில் அறிக்கை இடம் பெற வேண்டும் என ஒரு அரசனை வெளியிட்டால் ஏற்க்கனவே இருக்கும் தகவல் பலகைகளில் தமிழில் அறிக்கைகளை வெளியிட அணைத்து வசித்களையும் செய்து தருவது ஒரு ப்ராஜெக்ட்.
மார்க்கெட் டிமான்ட் :
மார்க்கெட் டிமாண்டின் காரணமாக நாம் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டி இருக்கலாம். எடுத்துக்காட்டாக குறைந்து வரும் நீர் மற்றும் நிலக்கரி வளங்களால் காற்றலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் ப்ராஜெக்ட் ஒரு நிறுவனம் செய்ய நேரலாம்.
பிசினஸ் தேவை:
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் தனது கிளைகளை விரிவுபடுத்த பத்து நகரங்களை தேர்ந்து எடுத்திருக்கலம். அதற்காக ஒரு ப்ராஜெக்ட் செய்ய நேரும்.
வாடிக்கையாளரின் தேவை:
ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளரின் தேவை ப்ரோஜெகடிர்க்கான தேவைகள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எப்ம் சேவை கொடுப்பதற்கான ஆராயச்சி ஒரு ப்ராஜெக்ட் ஆக அமையலாம்.
சட்ட பூர்வமான தேவை:
எடுத்துக்காட்டாக அணைத்து தகவல் பலகைகளும் தமிழில் அறிக்கை இடம் பெற வேண்டும் என ஒரு அரசனை வெளியிட்டால் ஏற்க்கனவே இருக்கும் தகவல் பலகைகளில் தமிழில் அறிக்கைகளை வெளியிட அணைத்து வசித்களையும் செய்து தருவது ஒரு ப்ராஜெக்ட்.
Thursday, October 27, 2011
ஆர்கனைசேஷன் அமைப்பு வகைகள்: I
ஆர்கனைசேஷன் அமைப்பு வகைகள்:
ஒரு நிறுவனத்தில் பல்வேறு வகையான மக்கள் பனியாற்றுகின்றணர். அவர்களை அனைவரும் குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர். இவர்களின் அமைப்புத் தன்மை பொறுத்து நிறுவனத்தின் செயல் திறன் அமைகிறது.
துரைசார்ந்த அமைப்பு - ஃபங்சனல் ஆர்கனைசேஷன் (Functional Organization):
1. இவை துறை சார்ந்து பிரிக்கப்படுகின்றன. (எ.கா. அக்கௌண்டிங்க், மார்க்கெட்டிங்,உற்பத்தி)
2. இவ்வகை ஆர்கனைசேஷனில் ப்ரொஜெக்ட்டுகள் துறை சார்ந்து மட்டுமே இருக்கும்.
நன்மைகள்:
1. ஸ்பெஷ்லிஸ்ட்டுகளின் மேலான்மை எளிதாகும்.
2. குழுவின் செயல் உறுப்பினர்கள் ஒருவருக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
3. அவர்களின் துறையில் வளர்ச்சி அடைவார்கள்.
தீமைகள்:
1. ப்ரொஜ்க்டின் முக்கியத்துவத்தை விட துறை சார்ந்த தேவைகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
2. ப்ரொஜ்க்ட் மேனெஜருக்கு மிகவும் குறைந்த அல்லது அதிகாரம் இருப்பதில்லை.
3. ப்ரொஜ்க்ட் மேனெஜ்மெண்ட் சார்ந்த அனுபவம் முழுதாக கிடைப்பதில்லை.
ஒரு நிறுவனத்தில் பல்வேறு வகையான மக்கள் பனியாற்றுகின்றணர். அவர்களை அனைவரும் குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர். இவர்களின் அமைப்புத் தன்மை பொறுத்து நிறுவனத்தின் செயல் திறன் அமைகிறது.
துரைசார்ந்த அமைப்பு - ஃபங்சனல் ஆர்கனைசேஷன் (Functional Organization):
1. இவை துறை சார்ந்து பிரிக்கப்படுகின்றன. (எ.கா. அக்கௌண்டிங்க், மார்க்கெட்டிங்,உற்பத்தி)
2. இவ்வகை ஆர்கனைசேஷனில் ப்ரொஜெக்ட்டுகள் துறை சார்ந்து மட்டுமே இருக்கும்.
நன்மைகள்:
1. ஸ்பெஷ்லிஸ்ட்டுகளின் மேலான்மை எளிதாகும்.
2. குழுவின் செயல் உறுப்பினர்கள் ஒருவருக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
3. அவர்களின் துறையில் வளர்ச்சி அடைவார்கள்.
தீமைகள்:
1. ப்ரொஜ்க்டின் முக்கியத்துவத்தை விட துறை சார்ந்த தேவைகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
2. ப்ரொஜ்க்ட் மேனெஜருக்கு மிகவும் குறைந்த அல்லது அதிகாரம் இருப்பதில்லை.
3. ப்ரொஜ்க்ட் மேனெஜ்மெண்ட் சார்ந்த அனுபவம் முழுதாக கிடைப்பதில்லை.
Thursday, April 14, 2011
ப்ராஜெக்ட் சார்ட்டர்
ப்ராஜெக்ட் சார்ட்டர் (Project Charter )
ஒரு ப்ரோஜெக்க்டிற்கு தேவையான குறிக்கோள்களையும், நோக்கங்களையும் வரையறுப்பதே ப்ராஜெக்ட் சார்டேரின் பயன். மேலும் இந்த டாகுமென்ட் ப்ரொஜெக்டின் முக்கிய ஆவணம் ஆகும்.
ப்ராஜெக்ட் சார்டேரின் பின்வரும் முக்கிய தகவல்களை நமக்கு தெரிவிகின்றது:
1 எதற்காக இந்த ப்ராஜெக்ட் ?
2 இந்த ப்ரொஜெக்டின் குறிக்கோள் மற்றும் தடைகள் (Constraints ) என்ன?
3 எவ்வாறு இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்தப்படும்
4 ப்ரொஜெக்டின் பங்குதரார்கள் யார் என்பதையும் தெரிவிக்கின்றது.
ப்ராஜெக்ட் சார்டரை தயாரிப்பதில் முக்கியமானவை:
1. முதலில் அதற்க்கு தேவையான் உள்ளிடுகளை தயார் செய்ய வேண்டும்
2 . முக்கியமாக ப்ரொஜெக்டின் பின்புலம், தொடர்புடையவர்கள் மற்றும் இதர செய்திகளை சேகரித்து கொள்ள வேண்டும்.
3 . பின்பு ஒரு தொடக்க வரைவினை தயார் செய்ய வேண்டும்
4 . முடிந்த வரியில் நிதி மற்றும் கால அட்டவணை சேர்ப்பது மிக நல்லதாகும்
ஒரு ப்ரோஜெக்க்டிற்கு தேவையான குறிக்கோள்களையும், நோக்கங்களையும் வரையறுப்பதே ப்ராஜெக்ட் சார்டேரின் பயன். மேலும் இந்த டாகுமென்ட் ப்ரொஜெக்டின் முக்கிய ஆவணம் ஆகும்.
ப்ராஜெக்ட் சார்டேரின் பின்வரும் முக்கிய தகவல்களை நமக்கு தெரிவிகின்றது:
1 எதற்காக இந்த ப்ராஜெக்ட் ?
2 இந்த ப்ரொஜெக்டின் குறிக்கோள் மற்றும் தடைகள் (Constraints ) என்ன?
3 எவ்வாறு இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்தப்படும்
4 ப்ரொஜெக்டின் பங்குதரார்கள் யார் என்பதையும் தெரிவிக்கின்றது.
ப்ராஜெக்ட் சார்டரை தயாரிப்பதில் முக்கியமானவை:
1. முதலில் அதற்க்கு தேவையான் உள்ளிடுகளை தயார் செய்ய வேண்டும்
2 . முக்கியமாக ப்ரொஜெக்டின் பின்புலம், தொடர்புடையவர்கள் மற்றும் இதர செய்திகளை சேகரித்து கொள்ள வேண்டும்.
3 . பின்பு ஒரு தொடக்க வரைவினை தயார் செய்ய வேண்டும்
4 . முடிந்த வரியில் நிதி மற்றும் கால அட்டவணை சேர்ப்பது மிக நல்லதாகும்
Friday, February 18, 2011
ப்ராஜெக்ட்மேலாண்மை செயல்பாட்டு குழுக்கள் மற்றும் அறிவுசார் துறைகள் யாவை ?
செயல்பாட்டு குழுக்கள் :
- தொடங்குதல்
- திட்டமிடுதல்
- செயற்படுத்துதல்
- கட்டுபடுத்துதல் மற்றும் கண்காணித்தல்
- முடிவிற்க்கு கொண்டு வருதல்
அறிவுசார் துறைகள்:
- வரையெல்லை (ஸ்கோப்)
- நேரம் (டைம்)
- செலவு/விலை (காஸ்ட்)
- தரம் (Quality )
- மனித வளம் (Human Resource )
- கருத்துப்பரிமாற்றம்
- சூழ் இடர் (ரிஸ்க்)
- கொள்வனவு மேலாண்மை (Procurement Management )
ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் அலுவலகத்தின் செயல்பாடுகள் என்ன ?
- வேறு வேறு ப்ரோஜெக்டுகளை ஒருங்கிணைப்பது.
- ப்ரொஜெக்டின் செயல்பாடுகள் உறுகமைப்பின் கொள்கைகள் ஒத்து இருகின்றனவா என்று கண்காணிப்பது
- தேவையான வளங்களை ஒன்றிணைப்பது மற்றும் மேலாண்மை செய்வது
- ப்ரொஜெக்டின் படிப்பினைகள் பதிவு செய்து அதனை மற்ற ப்ரோஜெக்டுகளுக்கும் பயன்பட செய்தல்.
- ப்ரொஜெக்டிற்கு வழிகாட்டுதல்
- ப்ரோஜெக்ட்களுக்கு இடையே கருத்துப்பரிமாற்றம் மற்றும் தொடர்பிர்க்கான வழி வகைகள் செய்தல் மேலும் அதனை மையப்படுத்துதல்
- மாற்றம் செய்வதற்கு தேவையான அமைப்பாக இருத்தல்
- ப்ராஜெக்ட் முடிவுக்கு கொண்டுவருதல்
Tuesday, August 24, 2010
ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட்
ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் என்பது ஒன்றுக்கு மேற்ப்பட்ட ப்ரோஜெக்டுகளை மேலாண்மை செய்வதாகும். ஒரு நிருவனத்தில் பல்வேறு ப்ரோஜெச்டுகள் இருந்தாலும் அதனை மேலாண்மை செய்தால் இதனை ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் என்று அழைக்கலாம். இவற்றில் ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டும் தொடர்புடையதாக இருப்பதால் இதன் சிக்கல் தன்மைகளிலும் மற்றும் அளவுகளில் வேறுபட்டு இருக்கின்றன. ப்ரோஜெக்ட்டானது ஒரு வெளிப்படையும் ப்ரோக்ராமனது ஒரு விளைவினையும் ஏற்படுத்துகின்றன.
ஒரு நிறுவனத்தில் நல்ல நல்ல ப்ரோஜெக்ட்குகளை செய்வது ப்ரோக்ராம் மேனேஜரின் கையில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் வளங்களை சரியாக சரியான நேரத்தில் சரியான ப்ரோஜெகடிக்கு பயன்படுத்துவதும் முக்கியமானதாகும்.
பயன்பாடு:
- அரசுத்துறை நிறுவனங்கள்
- பெரிய மற்றும் பொதுவுடைமை நிறுவனங்கள்
- நிர்மாணத்துறை சார்ந்த நிறுவனங்கள்
எடுத்துக்காட்டு:
ஒரு நிறுவனத்தில் VDI (Virtual Desktop Infrastructure) Transformation நடைமுறைபடுத்துதல் ஒரு ப்ரோஜெக்டகவும் , வீடியோ கான்பரன்சிங் நிறுவதல் ஒரு ப்ரோஜெக்டகவும் இருக்கலாம். மேலும் இது ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் இருக்கலாம்.
ப்ராஜெக்ட்மேனஜ்ஜெமேண்டிர்க்கும் உள்ள வேறுபாடுகள் :
- ப்ராஜெக்ட் என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே.
- ப்ரொஜெக்டின் வெற்றி அதன் வெளிபாடினை சார்ந்தது.
- ப்ரோக்ராம் மேனஜ்ஜெமேண்டின் மூலம் பல்வேறு வளங்களை பல்வேறு ப்ரோஜெக்ட்டுகளுக்கு பயன்படுத்த முடியும்
- ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையில் உள்ளது.
- ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது.
படம் நன்றி: http://www.quality-one.com/
Monday, August 23, 2010
ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் என்றால் என்ன?
ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் என்றால் என்ன?
ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் என்பது திட்டமிட்டு , ஒருங்கிணைந்து, தேவையான வளங்களை ப்ரொஜெக்டின் குறிக்கோளை அடைவதற்கான ஒரு முயற்சி. ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் மூலம் ஒரு குறிப்பிட்ட ப்ரொஜெக்டின் குறிக்கோளை அடைவதற்கு பல தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து முன்னேற வேண்டும்.
ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் தடைகள் சில:
- வரையெல்லை (SCOPE )
- நேரம் (டைம்)
- வரவு செலவு திட்டம் (பட்ஜெட்)
ப்ரொஜெக்டின் தற்காலிக தன்மை ப்ரொஜெக்டின் வாணிப செயல்பாட்டினை பாதிக்கலாம். இதற்காக ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் செய்யும் நபர் திறம்பட செய்வதற்கு தொழில்நுட்ப அறிவும் , மேலாண்மை அனுபவமும் மிக்க உதவி தரும். மேலும் செயல்படுத்துதல் மற்றும் கட்டுபடுத்துதல் மிகவும் முக்கியமான செயலாகும்.
படங்கள் : உதவி,நன்றி :- விக்கிபீடியா
Friday, August 20, 2010
ப்ரொஜெக்ட் என்றால் என்ன?

பலருக்கும் தாங்கள் ப்ரொஜெக்ட் செய்து கொண்டிருகிறொம் என்று தெரியும், ஆனால் பலருக்கு அதன் பரிமானம் என்ன, அதன் இயல்பு என்ன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. பலருக்கு நாம் தான் வேலை செய்கிறொம் ப்ரொஜெக்ட் மேனஜெருக்கு ஒன்றும் தெரியாது என்ற என்னம் கூட உண்டு. இதற்கு காரணம் நாம் ப்ரொஜெக்டின் இயல்பினை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே காரணம்.
ப்ரொஜெக்ட் என்பது நாம் பலரும் பல நாட்களில் பல்வேறு வடிவங்களில் செய்து கொண்டு தான் இருக்கிறொம். எடுத்துகாட்டாக வீடு கட்டுவது, கல்யாணம் செய்வது, ஒரு ஜாலியான டூர் செய்வது என்று பலவும் சொல்லாம். இருந்தாலும் நாம் அதனை பலரும் செய்து கொண்டிருந்தாலும் ஒரு சிலரே அதனை முன்னிருத்தி நடத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் யாராக இருக்கலாம் என்று பார்த்திர்கலென்றால் அவர்கள் நம் குடும்ப்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
ப்ரொஜெக்ட் என்பதை ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பொருளையோ அல்லது சேவையோ அல்லது முடிவையோ எட்டுவதற்க்கான முயற்சி. இது ஒரு கூறிப்பிட்ட தொடக்க நாளையும் முடிவுபெரும் நாளையும் கொண்டிருக்கும். பொர்துவாக நாம் நிர்னையித்த முடிவினை எட்டும் பொது ப்ரொஜெக்டாணது முடிவுரும்.மேலும் ப்ரொஜெக்ட் என்பது சமூக, சமுதாய மற்றும் பொருளாதார மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்.
நாம் தினமும் செயது கொண்டிருக்கும் வேலையை நாம் ப்ரொஜெக்ட் என்று சொல்ல இயலாது.மேலும் ப்ரொஜெக்டானது முடிவை நோஒக்கி பயனப்படும் பொது பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை கொண்டுருக்கலாம். (வீடு கட்டும் பொது எதிர்பாராத விதமாக சிமென்ட் விலை உயர்வு). இதற்க்காக தான் ப்ரொஜெக்ட் செய்யும் பொது தனிப்ப்ட்ட கவணம் தேவைப்படுகிரது. ஒரு ப்ரொஜெக்டை செய்வத்ற்க்கு ஒருவர் அல்லது ஒரு கூழு அல்லது ஒரு டிபர்ட்மென்ட் அல்லது ஒரு நிறுவனமே செயல்படலாம்.
தொடரும் ..
Subscribe to:
Posts (Atom)








.png)